8 வழிச்சாலை வழக்கில் உச்சநீதிமன்றம் கேட்ட ஒற்றை கேள்வி., அதிர்ந்து போன மத்தியரசு!! - Seithipunal
Seithipunal


8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நாளை மத்திய அரசு மனுத்தாக்கல் செய்ய  உத்தரவுயிட்ட நீதிபதிகள். எத்தனை பேர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி? எழுப்பினர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த மத்தியரசு, சாலை திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று உள்ளது, இப்பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மத்தியரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது, இத்திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே? நீதிபதிகள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் உறுதியளித்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court raise questions to central government for eight way road


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->