ப.சிதம்பரத்திற்கு திஹார் ஜெயில்?! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!  - Seithipunal
Seithipunal


ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு மீண்டும் சி.பி.ஐ. காவலை நீட்டித்து   உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிதம்பரத்தை கைது செய்த சி.பி.ஐ., அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்தது. முதல் முறையாக கடந்த 22ஆம் தேதி ஆஜரான பொழுது 26 ஆம் தேதி வரையும், பின்னர் 26 ஆம் தேதி ஆஜரான பொழுது 30 ஆம் தேதி வரையும், பின்னர் செப்டம்பர் 2  ஆம் தேதி வரையும், அதனையடுத்து செப்டம்பர் 3 ஆம் தேதி வரையும் சி.பி.ஐ. காவல் நீட்டிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 5 ஆம் தேதி வரை சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. கவலை நீட்டித்துள்ளது. அவருக்கு சி.பி.ஐ. காவல் நீட்டிப்பது இது ஐந்தாவது முறையாகும். 

மேலும் நாங்கள் காவலில் வைத்து விசாரிக்கவில்லை என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சி.பி.ஐ. காவல் நீட்டிப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். அவரை கைது செய்து திஹார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என சி.பி.ஐ.  வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

இதுகுறித்து சிதம்பரம் தரப்பில் நேற்று வாதிடப்பட்ட போது, வீட்டுக்காவலில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் திஹார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என வாதிடப்பட்டது. இந்நிலையில் அவருக்கு சி.பி.ஐ. காவல் நீட்டிக்கப்பட்டுளள்து. செப்டம்பர் 5ம் தேதி  ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court extend the CBI custody to P Chidambaram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->