இபிஎஸ் தரப்புக்கு சறுக்கல்! ஓபிஎஸ் தரப்பு ஆரவாரம்! இது அண்ணன் ஓபிஎஸ் க்கு கிடைத்த வெற்றி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம் - ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொது குழு சம்பந்தமாக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிமன்றத்தின் நீதிபதி வழங்கிய தீர்ப்பில் கட்சி விதிகளின் படி பொதுக்குழு கூட வில்லை என திருப்பு வழங்கினார். அதை எதிர்த்து இபிஎஸ் தரப்பு செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதித்தும் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கினர். 

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஓபிஎஸ் தரப்பின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஓபிஎஸ் தரப்பினர் "இபிஎஸ் தரப்பில்  11/07/2022 அன்று கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் அதிமுகவின் சட்ட விதிகளின்படி நடைபெறவில்லை என தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு தடை விதித்தது அந்தத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்" என வாதிட்டனர்.

அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் "நாங்கள் இதில் யாருக்கு ஆதரவு இருக்கிறதா இல்லையா என்று ஆராயப்போவதில்லை. ஆனால் இந்த பொதுகுழு கூட்டம் சட்டப்படி கூட்டப்பட்டதா என்பதை மட்டும் தான் இந்த வழக்கில் ஆராய போறோம்" எடுத்துரைத்தனர். 

இதற்கு மேல் 11/7/2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிபதிகள் இபிஎஸ் தரப்பை பார்த்து நீங்கள் உத்தரவாதம் தர வேண்டும் என்று கேட்டனர். அதனை ஏற்றுக் கொண்ட இபிஎஸ் தரப்பு 11/07/2022 அன்று நிறைவேற்றப்பட்ட பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த நிறைவேற்ற தீர்மானம் உட்பட எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாட்டோம் என உத்தரவாதம் அளித்தனர். 

அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த வழக்கை நவம்பர் 21 ஆம் தேதி வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 23/06/2022 தேதி நடைபெற்ற பொதுக்குழு சம்பந்தமான மேல் முறையிட்டு வழக்கையும் சேர்த்து விசாரிப்போம் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "இபிஎஸ் தரப்பு 11/07/2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நான்கு மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தவோம் என தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். ஆனால் இன்று அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று அவர்களே உத்தரவாதத்தை கொடுத்துள்ளனர்.

 இதற்கிடையே உத்திரவாதத்தை மீறி பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெற்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சந்திக்க நேரிடும் என அவர்களுக்கே தெரியும். பொதுச் செயலாளர் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை வெற்றியாக கருதுகிறோம். உச்சநீதிமன்றம் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை ஆணை பிறப்பித்து விடும் என்ற பயத்தில் தான் தானாக முன்வந்து உத்திரவாதத்தை அளித்துள்ளனர். அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி" என பேட்டியளித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இன்றைய வாதத்தினை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். எப்படியோ வழக்கு முடியும் வரை பொதுச் செயலாளர் நடத்தப் போவதில்லை என்ற உற்சாகத்தில் உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தினால் இபிஎஸ் தரப்பு பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இது ஈபிஎஸ் தரப்புக்கு பெரும் சறுக்களாகவே இருக்கும். அவ்வாறு உத்திரவாதம் அளிக்காவிடில் உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து தடை விதித்திருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court bans AIADMK general secretary election OPS supporter Manoj Pandian


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->