ஜெயலலிதா மரணம், விசாரணையில் புதிய ட்விஸ்ட்! உச்சநீதிமன்றம் அதிரடி!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட அமைப்பானது தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்த அமைப்பானது ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அவருடன் தொடர்புடைய அனைவரையும் விசாரித்து வந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு சிகிச்சை அளித்த அப்போல்லோ மருத்துவமனை மருத்துவர்களையும் விசாரிக்க சம்மன் அனுப்பியது. 

ஆனால் அவருடைய சம்மனை ஏற்காத அப்பல்லோ மருத்துவமனை எங்கள் மருத்துவர்களை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக ஒப்புக்கொள்ள மாட்டோம் என்றும், ஆறுமுகசாமி ஆணையம் இல்லாமல் மருத்துவர் குழு அமைத்து 
 அப்போல்லோ மருத்துவர்களை விசாரிக்க வேண்டும் என அப்போல்லோ நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதனை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்தது. 

இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறி இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அப்போல்லோ மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ்  உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. 

ஏறக்குறைய ஒன்றரை வருடங்களாக நடைபெற்று வரும் இந்த ஆணையத்தின் விசாரணை தற்போது இடைக்காலத்தடை பெற்று இருப்பது புதிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court ban arumugasamy commission inquiry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->