ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி!!  - Seithipunal
Seithipunal


டெல்லியில் இரண்டு நாட்களாக ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்ஜாமீன் பெறுவதில் மூத்த வழக்கறிஞரான சல்மான் குர்ஷித், கபில் சிபில் போன்றோர் மிகுந்த சிரத்தை எடுத்து உச்சநீதிமன்றத்தில் வட்டம் அடித்து  வருகிறார்கள். ஒருவழியாக நாள் முழுவதும் போராடி வழக்கினை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு வந்தார்கள். 

தன்னுடைய தரப்பு விளக்கங்களை எடுத்து வைத்த பிறகு., காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து டெல்லியில் இருக்கும் தனது இல்லத்திற்கு ப.சிதம்பரம் சென்றார். அவர் இல்லத்திற்கு சென்ற செய்தியை அறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் அவரது இல்லத்தினை சுற்றி வளைத்தனர். வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சுவரேறி குதித்து உள்ளே சென்றனர்.  பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அதிகாரபூர்வமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

இந்தநிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய திங்கட்கிழமை வரை இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை தொடர்புடைய வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு. 

இந்த ஜாமின் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிற்கு மட்டும் தான், சிபிஐ சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் திங்கள்கிழமை விசாரனைக்கு வரவுள்ளது.அதனால் சிபிஐ வழக்கில் ஜாமின் கிடைக்கும் வரை ப.சிதம்பரம் சிறையில் தான்  இருப்பார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court bail to chithambaram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->