உள்ளாட்சி தேர்தல் அறிவித்த வேகத்தில், உச்சநீதிமன்றம் பரபரப்பு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக மற்றும் 6 புதிய மாவட்டங்களின் 6 வாக்காளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பிறப்பித்தது. 

தொகுதி வரையறை, வார்டு வரையறை, புதிய மாவட்டங்களுக்கான வார்டு வரையறை மற்றும் பெண்கள் ஆதிதிராவிடர் பழங்குடியினர் அவர்களுக்கான இட ஒதிக்கீடு மற்றும் தற்போது புதிய அவசர சட்டத்தின் மூலம் மறைமுக தேர்தலாக அறிவிக்கப்பட்ட பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மேயர் போன்ற பதவிகளுக்கான இட ஒதுக்கீடு போன்றவை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கக் கூடாது என திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றினை கடந்த வாரம் தாக்கல் செய்தது. 

அதேபோல புதியதாக  தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களை சேர்ந்த 6 வாக்காளர்களும் அதே காரணங்களை கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்கள். இந்த நிலையில் டிசம்பர் இரண்டாவது வாரம் வரை தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கால அவகாசம் வழங்கி உள்ளதால், அதன் பிறகு அதாவது இரண்டு வாரத்திற்கு பிறகு மேற்கண்ட வழக்குகளை விசாரணைக்கு பட்டியல் இடமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக நடைபெறாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான திமுக தொடர்ந்த வழக்கு 5 ஆம் தேதி அவசர வழக்காக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.. 

டிசம்பர் இரண்டாவது வாரத்தில் பட்டியலிட உத்தரவிடப்பட்ட வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court announced dmk petition hear on December 5


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->