மத்திய அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு.! ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகள்.! - Seithipunal
Seithipunal


வரும் 21 ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஹரியானா மாநிலம் படேகாபாத் மாவட்டத்தின் தோஹானா, சிர்சா மாவட்டத்தின் எல்லெனாபாத் பகுதிகளில் பாஜக சார்பில் தேர்தல் பிரசாரக் பொது கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் , நேற்று ஹரியானா மாநிலத்தில் 3 பிரசார கூட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேச இருந்தார். இந்நிலையில் , அவருக்கு தீடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களால் திட்டமிட்டபடி பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க முடியவில்லை.

உடல்நலக்குறைவு காரணமாக பொது கூட்ட்டத்தில் அமித்ஷா பங்கேற்காத நிலையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தேர்தல் பொது கூட்டங்களில் உரையாற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sudden illness for central minister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->