நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கனவை நிறைவேற்றுவோம் - பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மத்திய அரசின் சார்பாக பிரதமர் மோடியின் தலைமையில், நேதாஜியின் சொந்த மாநிலமான மேற்கு வங்காள மாநிலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மஹாலில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் கொண்டாட்டம் மத்திய அரசின் சார்பாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள ஆளுநர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்ததாவது, "ஆண்டுதோறும் நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23 ஆம் தேதி நாடு முழுவதும் ’பரக்ராம் திவாஸ்’ விழாவாக கொண்டாட அறிவித்துள்ளோம்.

தீர்மானமான மற்றும் உறுதியானவரால் எதையும் சாதிக்க முடியும் என்ற நேதாஜியின் வாழ்க்கை அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும். வறுமை, கல்வியின்மை, நோய் ஆகியவை நாட்டின் மிகப்பெரிய பிரச்சனைகள். இதை தான் நேதாஜி ஒழிக்க கருதினார். சமுதாயம் ஒற்றுமையுடன் இணையும் போது இந்த பிரச்சனைகள் தீர்த்துவிடும்." என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

subash chandra bose


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->