தமிழகமே தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், சத்தமே இல்லாமல் ஸ்டாலின் செய்த வேலை! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக எப்போதும் இல்லாத அளவிற்கு சென்னை மாநகரம் தண்ணீர் தட்டுப்பாட்டில் தவித்து வருகிறது. சென்னைக்கு நீர் ஆதாரங்களாக விளங்கிய ஏரிகள் அனைத்தும் வறண்டு விட்ட நிலையில் தற்போது குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து வரும் நீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் வரும் நீரும் மூலம் மட்டுமே தண்ணீர் தேவை தற்போது பூர்த்தி செய்ய பட்டு வருகிறது. மூலைக்கு மூலை தண்ணீர் குடங்களுடன் மக்கள் சுற்றி வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. ஆங்காங்கே தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் தேவை ஓரளவு சரி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இது குறித்து விவாதிக்க, உடனே சட்டசபை கூட்ட வேண்டும் எனவும் இல்லை என்றால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அதேபோல தண்ணீர் பஞ்சம் ஏற்பட காரணமாக இருந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், இல்லை என்றால் அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் அறைகூவல் விட்டிருந்தார் மு க ஸ்டாலின். 

இந்நிலையில் தமிழகமே தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் சத்தமே இல்லாமல் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் சிங்கப்பூருக்கு 5 நாள் சுற்றுப்பயணம் சென்று உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் அனைவரும் இங்கே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் அரசுக்கு உரிய ஆலோசனைகளை அளித்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவர் 5 நாள் சுற்றுப்பயணம் சென்ற விவகாரம் வெளியே வராதவாறு வேறு சில பிரச்சினைகளும் திட்டமிட்டு பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிகள் திணறும் போது, அதை எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டு சரி செய்யும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜகா வாங்கி இருப்பது தமிழக மக்களிடையே திமுகவின் மீது அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. சாவல், எச்சரிக்கை விட்ட எதிர்க்கட்சி தலைவர் தன் பொறுப்பை உணராமல் சுற்றுப்பயணம் செல்லும் நேரமா இது? எல்லாம் வாய் ஜாலம் தானோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. 

English Summary

Stalin went Singapore tour


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal