உள்ளாட்சித் தேர்தல் : திமுகவை தோற்கடிக்க சதி! அறிவிப்பு வெளியான வேகத்தில் ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பழனிச்சாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக இருந்தவர் பழனிச்சாமி. அவர் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு டவுன் பஞ்சாயத்து இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக புதிய மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளராக விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணிசெய்த சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த நியமனத்தினை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 

ஸ்டாலின் டிவிட்டரில் "உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் திரு.பழனிச்சாமி அவர்களை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது!

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் "விசுவாசமாகப்" பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? 

இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா?" என ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin tweet about state election commission secretary changed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->