பள்ளிக்கூடத்துக்கு போன ஸ்டாலின், பதவி ஆசையால் கூறிய வார்த்தை.!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவரான முகஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் முடிவு காரணமாக பிசியாக இருந்த போதும் தனது பால்ய நண்பர்களைச் சந்திக்கவும் சில மணிநேரம் ஒதுக்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. 

50 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தன்னுடைய பள்ளி நண்பர்களை முகஸ்டாலின் அவர்கள் சந்தித்து பேசி இருக்கின்றார். சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் மெட்ராஸ் கிறிஸ்டின் பள்ளியில் தான் கடந்த 1970ம் ஆண்டு ஸ்டாலின் படித்துள்ளார். தற்போது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு குறித்த நிகழ்வு ஒன்று நடைபெற்றது. 

இதில் ஸ்டாலின் தன்னுடன் படித்த சக மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி மகிழ்ந்துள்ளார். அத்துடன் அவர் விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் நண்பர்களுடன் சேர்ந்து வலம் வந்து தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

இந்தநிலையில், ஸ்டாலின், உரையாடிபோது "நான் படித்த எம்.சிசி பள்ளிக்கு மேயராகவும், துணைமுதல்வராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் வந்த நான் அடுத்து எப்படி வருவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. " என்று கூறியுள்ளார். 

ஒருவேளை 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஜெயித்து முதல்வராகும் எண்ணத்தில்தான் அதுபோல ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin today speech in his school


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->