போராட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்!! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாநில ஆளுநரின் பரிந்துரையை ஏற்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். 

இந்தநிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு திமுக சார்பில் நேற்று  காலை 11.00 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து கட்சிகளுக்கும் திமுக  தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்த நிலையில். 

நேற்று  காலை 11.00 மணி அளவில் திமுக தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில், திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் எம்.பி.யும் போராட்டத்தில் பங்கேற்றானர்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், அங்கு போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் முன்வைத்து முழக்கங்களை  எழுப்பினர்.

இந்நிலையில், காஷ்மீரில் விவகாரத்தில்திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி தி.மு.க. ஏற்பாட்டில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin thanks to all parties


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->