பதவிக்கு வந்ததும், உதயநிதி செய்த காரியம்.! கடுப்பான ஸ்டாலின்.! பொறுப்பாளர்களுக்கு வேட்டு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 4ஆம் தேதி திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன் பின்னர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தை ஜூலை 6ஆம் தேதி முதன்முறையாக தனது தலைமையில் நடத்தினார். 

அதன் பின்னர், தமிழகம் முழுதும் உதயநிதி சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான, ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இளைஞரணியில் இடம்பெற்றுள்ள சில மாநில நிர்வாகிகளை மாற்றியமைக்க போவதாக உதயநிதி கூறியிருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. 

இளைஞர் அணியின் மாநில பொறுப்பில் இருப்பவர்கள் உதயநிதி ஸ்டாலினை விட வயதில் மூத்தவர்களாக இருக்கின்றனர். இதன் காரணமாகவே, உதயநிதி நியமனத்தின் போது ஜெயங்கொண்டம் சுபா சந்திரசேகருக்கு சட்டத் திருத்த தீர்மானக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

udhayanithi,dmk,seithipunal

இளைஞர் அணியில் மூத்தவர்கள் இருக்கும் பட்சத்தில் உதய நிதியின் கீழ் செயல்பட வேண்டி இருக்கும். இது உதயநிதிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கும் ஒரு நெருடலை ஏற்படுத்தக்கூடும் என்பதன் காரணமாக தான் சுபா சந்திரசேகர் வேறு பொறுப்பிற்கு மாற்றப்பட்டார்.

மேலும் உதயநிதி அவருக்கு ஒத்த வயதுடைய பொறுப்பாளர்களாக இருந்தால்தான் முடிவெடுக்கவும், செயல்படுத்தவும் சரியாக இருக்குமென திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறார். இதன் காரணமாக மாவட்ட பொறுப்புகளில் உள்ள சிலரை மாநில பொறுப்புக்கு கொண்டு வர திட்டம் தீட்டி இருக்கின்றார். அதற்கான ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இளைஞர் அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முழுக்க முழுக்க உதயநிதியின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்ற அளவிற்கு மாறுதல்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சீனியர்களுக்கு என்ன பொறுப்புகள் வழங்கலாம் என ஸ்டாலின் யோசனை செய்து வருகின்றார்., என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

stalin.dmk.seithipunal

என்ன தான் உதயநிதி எடுத்த முடிவு சாதமானது என்றாலும், பழைய பொறுப்பாளர்கள் எல்லாம் அவரது முடிவினை கண்டு கிலியில் இருக்கின்றனர். மூத்தவர்களுக்கு ஏற்ற பொறுப்புகளை வழங்க முடியாவிட்டால் இது திமுகவின் நீண்ட நாள் தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த கூடும் என்பதால் ஸ்டாலின் சற்று கடுகடுப்புடன் காணப்படுகிறார் என தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin tension about udhayanithi's new destination


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->