கிடைத்த இன்பமான செய்தி! உற்சாகத்தில் மிதக்கும் ஸ்டாலின்! ரைமிங்கில் பேசி அசத்தல்!  - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக இருந்து வந்த பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் அந்த மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணையும் விழாவினை இன்று சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பரணி கார்த்திகேயன் நடத்தி வருகிறார். இந்த விழாவில் பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் நீதிமன்றம் மற்றும் இடைத் தேர்தல் மூலமாக திமுக கூட்டணிக்கு மேலும் 3 புதிய எம்எல்ஏக்கள் கிடைக்க இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

இன்றைய கூட்டத்தில் அவர் பேசியதாவது, விரைவில் உள்ளாட்சி தேர்தல் என்பது "வரும் ஆனால் வராது" என்ற திரைப்பட வசனம் போல் இருந்து வருகிறது. திமுக என்பது ஜனநாயக கட்டமைப்பு கொண்ட கட்சி. பிற கட்சிகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்த ஆட்கள் இல்லை, ஆனால் திமுகவில் அந்த நிலை இல்லை. மேலும் இனி யாரும் எனக்கு சால்வை, பூங்கொத்து அளிக்க வேண்டாம், புத்தகங்களை வழங்குங்கள் என கூறியுள்ளார். 

மணிரத்னம் உள்பட 49 பேர் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு கொடுமையானது. வழக்கை திரும்ப பெற வேண்டும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார். 

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து பேசிய ஸ்டாலின், சூழ்ச்சி மூலமாகத்தான் அதிமுக வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே அதிமுகவிற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துவிட்டார், பிறகு அதிகாரிகள் என்ன செய்வார்கள். முறையாக தேர்தல் நடந்திருந்தால் இந்த நேரம் திமுக ஆட்சியில் இருந்திருக்கும். ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையால் எம்எல்ஏ இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார் என ரைமிங்காக பேசினார். மேலும் நீதிமன்றம் மற்றும் இடைத்தேர்தல் தீர்ப்பிற்கு பிறகு நாங்குநேரி, விக்கிரவாண்டி, ராதாபுரம் என 3 சட்டமன்ற உறுப்பினர்களை திமுக கூட்டணி பெறும் எனவும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ராதாபுரம் தொகுதி விவகாரம் பரபரப்பான நிலையில் இருக்கிறது. மறுவாக்கு எண்ணிக்கை முடிவடிந்தாலும், உச்சநீதிமன்ற தடையால் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. முடிவுகள் தெரியவில்லை என்றாலும் இரண்டு தரப்புமே நாங்கள் தான் வெற்றியாளர்கள் என நம்புகிறார்கள். ஸ்டாலினும் அதனை நம்பி தான் ராதாபுரம் திமுகவிற்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டாலின் சொன்னது போல விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்றாலும் திமுகவிற்கு புதியதாக உறுப்பினர்கள் கூட போவதில்லை. ஏனெனில் ஏற்கனவே அந்த இரண்டு தொகுதிகளும் திமுக கூட்டணியிடம் தான் இருந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin speak about by election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->