நீட் தேர்வு நிச்சயம் ரத்து.?! வெளியான பரபரப்பு அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகை முன்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது.

அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வில் தொடர்ந்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு இருக்கின்றது.

இது குறித்து தமிழக ஆளுநரை முதல்வர் பழனிசாமி வலியுறுத்த வேண்டும். அவர் செய்யவில்லை என்றால், எதிர்க்கட்சித் தலைவராக அதை நான் செய்வேன். தொடர்ந்து கேள்வி கேட்பேன் என உறுதியாக இங்கே கூறிக்கொள்கிறேன்.

மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது பலி பீடமாக இருக்கின்றது. திமுக ஆட்சி அமைந்த உடனேயே அந்த பலி பீடத்தை, அதாவது நீட் தேர்வை ரத்து செய்திடுவோம் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin pressmeet while protest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->