நாடே தீபாவளி கொண்டாட வழக்கம் போல., சைலன்ட் மோடில் ஸ்டாலின்.! வச்சு செய்யும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


நவம்பர் 14-ம் தேதியான இன்று நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய குடியரசு தலைவர், இந்திய பிரதமர், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அன்னை மகாலட்சுமி துணையுடன் நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இத்தீபத் திருநாள், அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து, அறிவொளி பிறந்து, இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது.

தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகி, நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி பல அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம் போல திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த தீபாவளிக்கும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது குறித்து சமூகவலைத்தளங்களில் "இன்றைய தினத்தை விடுமுறை தினமாக கொண்டாடி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின் என்றும், கனடா நாட்டு பிரதமரே வாழ்த்து சொல்லிட்டாரு., ஜப்பான் துணை முதல்வர் சொல்லமாட்டாரா என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதனை "விடுமுறை தின வாழ்த்துக்கள்" என்ற சிறப்பு ஹேஷ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin not wish to Diwali


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->