டி.டி.வி.தினகரனுடன் ஸ்டாலின் சந்தித்து பேச்சு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்து, ஆறு மாதத்திற்குள் அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்பது விதியாகும். 

அந்தவகையில் தமிழக சட்டப்பேரவையின் 2020 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த 15வது சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு எம்எல்ஏக்கள்  அனைவரும் வருகை தந்தனர். 

இதையடுத்து, சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ரோகித் உரையுடன் தொடங்கியது, அப்போது அனைவருக்கும் காலை வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தமிழில் தனது உரையை ஆளுநர் தொடங்கினார். 2020 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் உரையாற்றுவது பெருமகிழ்ச்சி அடைகிறேன். 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு மென்மேலும் அமைதியும் வளர்ச்சியும் வழங்கும் என வாழ்த்துகிறேன் என்றார்.

இந்தநிலையில், திமுக எம்எல்ஏக்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினும், அமமுக பொதுசெயலாளர் தினகரனும் சந்தித்து பேசிக்கொண்டனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin meet with ttv


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->