தேர்தலுக்காக திமுக போட்ட வியூகம்.! சல்லி சல்லியாக நொறுங்கி போன பரிதாபம்.! ஸ்டாலின் அப்செட்.!  - Seithipunal
Seithipunal


திமுக எல்லோரும் நம்முடன் என்ற பெயரில் இணையவழியில் உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளது. இதில், பல கோடி செலவில் விளம்பரங்கள் உருவாக்கப்பட்டு பல்வேறு சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றது. இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றில் இளம் பெண்ணுடைய புகைப்படம் காணவில்லை என்று இடம்பெற்றுள்ளது. 

அதில் மேற்கு மாம்பலம் பார்த்தசாரதி எனும் நபர் காணாமல் போன தன்னுடைய மகள் காயத்ரி குறித்து விளம்பரம் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் உயரமான அழகான 21 வயது உள்ள என்னுடைய அன்பு மகள் காயத்ரி காணவில்லை. வீட்டிற்கு வந்து விடு காயத்ரி. உன்னால் அனைவரும் சோகத்தில் இருக்கிறோம். 

உன்னுடைய இரண்டு கோரிக்கைகளையும், நாங்கள் ஏற்றுக்கொண்டோம். நீ உனக்கு பிடித்த வேலையை பார்க்கலாம். அத்துடன் அது இரண்டாவது கோரிக்கையான எல்லோரும் நம்முடன் என்ற ஆன்லைன் திட்டம் மூலம் நமது குடும்பத்தை திமுகவில் சேர வேண்டும் என்பதும் நிகழ்ந்துவிட்டது. சீக்கிரம் திரும்பி வா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி என்று போட்டு முன்னாள் சங்கி என்று ஈமெயில் கொடுத்துள்ளனர். இணையவழியில் உறுப்பினர், சேர்க்கை திமுக எடுத்த முயற்சியினால், தமிழக மீம் கிரியேட்டர்களுக்கு பயங்கரமாக கண்டெண்ட் கிடைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். இது i-pac நிறுவனத்தின் திட்டமா என்பது தெரியவில்லை. இதன் காரணமாக ஸ்டாலின் எக்கச்சக்க கடுப்பில் இருப்பதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin may upset with i pac


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->