வைகோவின் கனவில் மண்ணை போட்ட திமுக.. ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்.. மூன்றுமே திமுக தான்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டமன்றத்தின் பலத்தின்படி திமுக அணிக்கு 3 இடங்களும் அதிமுக அணிக்கு 3 இடங்களும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதனால் இந்த தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திமுக சார்பில் போட்டியிடும், அந்த கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் சண்முகம், திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், திமுகவில் இருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மேலும் ஒருவர் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். அவர் யார் என்று பார்க்கும் பொது திமுகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் நிலைமையை எதிர்கொள்ள திமுக புதிய முடிவை எடுத்துள்ளது. என்.ஆர்.இளங்கோ இன்று வேட்புமனுக்கு தாக்கல் செய்யயுள்ளார். தற்போது வைகோவின் நிலை என்ன ஆகும் என்று தெரியவில்லை. இதன்முலம் வைகோ தனது ராஜ்யசபா பதவியை இழந்துவிடுவார் என்று தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin master plan in rajya sabha


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->