உயர்கல்வித்துறை விரிவுரையாளர்கள் பணி நியமன ஆணை.! முதல்வர் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உயர்கல்வித்துறை சார்பில் சிறப்பு பயிலகங்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு 1024 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணையை தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், " அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் உரிய நபர்களை தேர்வு செய்திட கடந்த 27.11.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்துடன் 8.12.2021 முதல் 13.12.2021 வரை ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு அந்த முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி 1024 நபர்கள் இந்த விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இத்தகைய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் இதற்கான ஆணைகளை வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் கா.பொன்முடி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் திருமதி க.லட்சுமி பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin Gives Polytechnic college professor job announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->