துண்டுச்சீட்டை பார்த்து பேசுவது ஏன் ? முதன் முறையாக ஸ்டாலின் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


மன்னர் பூலித்தேவனின் படைத் தளபதியாக இருந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன். 1767 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற சண்டையில், வெறும் 2000 ஆயிரம் வீரர்களுடன் மட்டுமே சென்ற ஒண்டிவீரன் அந்த போரில் வெற்றி பெற்றார்.

பூலித்தேவனின் போர் வாள் என்று புகழப்படும் ஒண்டிவீரனின் 248 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள ஒண்டி வீரனின் மணிமண்டபத்தில் ஒண்டிவீரனின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,  2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் ஸ்டாலின் கூறினார். பால் விலை வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த அரசு முயற்சித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

துண்டு சீட்டு வைத்து பேசுவதாக பாஜக விமர்சிப்பது பற்றி செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த ஸ்டாலின், இதுபோன்ற விமர்சனங்களை பற்றி தாம் கவலைப்படவில்லை என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin explain for bit paper reading


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->