துரைமுருகன் வாரிசுக்கு., திமுக வைக்கும் முற்றுப்புள்ளி.! கறார் காட்டும் ஸ்டாலின்.!  - Seithipunal
Seithipunal


முன்னதாக நடைபெற இருந்த வேலூர் தேர்தல் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கூறியதால், தடுத்து நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் தேர்தல் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக சார்பாக ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களே மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட தீபலட்சுமியே மீண்டும் வேட்பாளராக களமிறங்குகிறார்.

DEEPALAKSHMI REQUEST, SEITHIPUNAL

அவர் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலர் உள்ளிட்டோருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், "ஏற்கனவே தேர்தல் ரத்தாக காரணமாக இருந்த கதிர் ஆனந்த் மற்றும் ஏ சி சண்முகம் ஆகியோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் அவர்களை வேட்பாளராக களம் இறங்கியுள்ளது தேர்தலை சீர்கெடுக்கும் நடவடிக்கையாக தோன்றுகிறது.

NTK, DEEPALAKSHMI, SEIHTIPUNAL

முன்னதாகவே பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக கதிர் ஆனந்த் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தொடர்புள்ள இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்து எந்தவித தீர்ப்பும் வராத நிலையில், அவர் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இவர்கள் எந்த எல்லைக்கும் சென்று இந்த தேர்தலில் ஜெயிக்க முயல்வார்கள். முன்பைவிட பணப்பட்டுவாடா தாறுமாறாக நடக்கும்.

இவர்கள் இருவரையும் தகுதி நீக்கம் செய்யாவிட்டால் வேலூரில் நேர்மையான தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்காது." என அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு முன்பாக துரைமுருகன் உடன் ஸ்டாலின் ஆலோசனை செய்துள்ளார். 

DURAIMURUGAN, SEITHIPUNAL

அப்பொழுது ஸ்டாலின் மாற்று வேட்பாளராக திமுக சார்பில் நிற்பது யார் என கேள்வி கேட்டிருக்கிறார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் துரைமுருகன் ஷாக் ரியாக்ஷன் கொடுத்துள்ளார். பின்னர், "சென்ற முறை மாதிரி இந்த முறை நடக்காது. அதனால் மாற்று வேட்பாளர் யார் என்ற கவலை தேவையில்லை. கதிரின் மனைவியை தான் போனமுறை நிறுத்தினோம், தற்போதும் அவரை தான் நிறுத்த இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

DURAIMURUGAN, KADHIR ANANTH, SEITHIPUNAL

அதற்கு ஸ்டாலின், "இல்ல.! நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். கதிர் மேலேயும், ஏ சி சண்முகம் மேலையும் பலவித புகார்கள் போய்க்கொண்டிருக்கிறது. மீண்டும் சூழ்ச்சிகள் நடந்தால் தப்பிப்பது கடினம். அதனால் கட்சி அனுபவம் உள்ள ஒருவரை மாற்று வேட்பாளராக நிறுத்துங்கள்." என சற்று காரராகவே ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

KADHIR ANANTH WIFE, SANGEETHA DMK, SEITHIPUNAL

அதன்பின்னர், திமுகவின் மாற்று வேட்பாளராக கதிரின் மனைவியா அல்லது வேறு திமுகவின் வேறு நிர்வாகியா என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில், சென்ற முறை கதிர் மீது குற்றம் சுமத்தப்பட்டதனால், அவரால் பிரச்சாரம் செய்ய இயலவில்லை. கதிரின் மனைவி சங்கீதா தான் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

STALIN CONDITION TO DURAIMURUGAN ABOUT VELLORE ELECTION


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->