#Breaking: பதவியேற்றவுடன் முக்கிய விஷயத்தை கையில் எடுத்த ஸ்டாலின்.! பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரோனா இரண்டாவது அலையால் தமிழகத்தில் மிகவும் இக்கட்டான சூழல் நிலவுகிறது. 

அரசுக்கு மக்களை காக்க வேண்டிய பொறுப்பு உணர்வு இருக்கிறது. பாதிப்பு அன்றாடம் 25 ஆயிரம் என்ற அளவில் இருக்கிறது. நோய் பாதிப்பிற்கு, ஏற்ப ஆக்சிஜன் வசதி மற்றும் படுக்கை வசதி தேவை அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். 

தற்போது பணியிலிருக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் விட கூடுதல் பணியாளர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம் அதிகமாக இருக்கிறது. 

எனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா குறித்த உண்மையை நேருக்கு நேர் சந்தித்து செயல்பட தயாராக வேண்டியது அவசியம். நம்மிடையே இருக்கும் குறைபாடுகளை கடக்க வேண்டிய தேவை இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin cm speech about corona


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->