முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க ஸ்டாலின், கனிமொழி கூட்டாக விமானத்தில் பயணம்.! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இந்தத்தேர்தலில்மொத்தமுள்ள 81 இடங்களில் ஜே.எம்.எம், காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களிலும், பாஜக 25 இடங்கலில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஜே.எம்.எம், காங்கிரஸ் கூட்டணி அங்கு ஆட்சி அமையவுள்ளது.  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதலமைச்சராக இன்று பதவி ஏற்க உள்ளார்.

ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது மு முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டுச் சென்றார். 

பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ஸ்டாலினுடன் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி ஆகியோரும் சென்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin and kanimozhi goes to jharkhand


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->