திமுக கூட்டணி விவகாரத்தில் பல்டி அடித்த ஸ்டாலின்.. குழப்பத்தில் உபிஸ்..! - Seithipunal
Seithipunal


டந்த சில வாரங்களாகவே திமுக - காங்கிரஸ் இடையே பிரச்சனை நிலவி வந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் பிரச்சனை இல்லை, இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை என்று துரைமுருகன் தெரிவித்து இருந்தார். 

இதற்கு பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி," டெல்லியில் காங்கிரஸ் தலைவரிடம் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றேன். 

துரைமுருகன் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொண்ட பின் அது குறித்து கருத்து தெரிவிக்கின்றேன். எங்களது அறிக்கை உள்ளாட்சித் தேர்தல் குறித்து தான். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கும் சம்பந்தம் அறிக்கைக்கும் சம்மந்தம் இல்லை. திமுக காங்கிரஸ், மதசார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க கூடிய கூட்டணி கொள்கையோடு தான் இணைந்து இருக்கின்றோம். அறிக்கை யாருக்கும் எதிரானது அல்ல. 

அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஸ்டாலினுடன் நல்ல நட்பு உண்டு. புரிதலும் உண்டு. இரு கட்சிகளிலும் கீழ் நிலையில் இருப்பவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருக்கின்றது. ஆதங்கமும் இருக்கின்றது. இடங்களை கொடுக்க முடியாமல் அவர்களும் சிரமப்படுவதை பார்க்க முடிகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை. வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை." என்று கே.எஸ்.அழகிரி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை கே.எஸ்.அழகிரி நேரில் சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக காங்கிரஸ் கூட்டணி ஒரு மதச்சார்பற்ற கூட்டணி, இதனை கட்டாயம் பிரிக்க முடியாது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் எப்போதும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கும். 

Image result for k.s.alagiri seithipunal

ரஜினி முரசொலியும் துக்ளக் பத்திரிக்கை இரண்டையும் சேர்த்து கூறியது தவறு. ஏதாவது ஒன்றைக் கூறி இருக்கவேண்டும் என்றும், தாங்கள் என்ன ஆலோசனை நடத்துகிறார்கள்? என்று கேட்டதற்கு தர்பார் படம் சிறப்பாக உள்ளது. நான் பார்த்து விட்டேன் நீங்கள் சென்று பார்க்க வில்லையா? என்பது குறித்த காமெடி சம்பவம் நடைபெற்றது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து பொது இடங்களில் இரு கட்சியினரும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. திமுகவின் நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ் எந்த விதத்திலும் உதவி செய்யும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

மேலும், முன்னதாக துரைமுருகன் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் பிரச்சனை இல்லை, இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது ஸ்டாலின் திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது என்று குறிப்பிட்டிருப்பது கழக தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin about dmk congress alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->