என்னையும் வாழ வைப்பார்கள் என நம்புகிறேன்., உதயநிதி குறித்த உண்மையை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி.! - Seithipunal
Seithipunal


சினிமா திரையுலகில் பட வாய்ப்பிற்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளதாக கூறி சர்ச்சையை கிளப்பியவர் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் இவர் பாலியல் குற்றச்சாட்டு அளித்து தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பெயர்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார்.

அதுமட்டுமின்றி ஒருசில நடிகைகளை குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு பல குழப்பங்களை செய்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருப்பவர் ஸ்ரீரெட்டி. 

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை ஸ்ரீ ரெட்டி குறித்து கிளம்பியது, அதாவது நடிகரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக சில பதிவுகள் உலா வந்தன, அந்த பதிவில், ஹலோ உதயநிதி ஸ்டாலின் ஐதராபாத்தில் கதிர்வேலன் காதல் படப்பிடிப்பின்போது உங்களை விஷால் மூலம் சந்தித்தேன். அப்போது உங்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறினிர்கள். பின்னர் கிரீன் பார்க் ஹொட்டலில் அன்று இரவு முழுவதும் உறவில் இருந்தீர்கள், அதற்கு பிறகும் நாம் நிறைய செய்துள்ளோம். ஆனால் படவாய்ப்பு மட்டும் கொடுக்கவேயில்லை. உதயநிதி சார் நீங்கள் மிகவும் சிறந்தவர் என ஸ்ரீரெட்டி பதிவிட்டதாக பதிவுகள் சமூகவல்தளங்களில் வெளியாகின.

இதனைத்தொடர்ந்து, உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு அது, மேலும், அது எனது முகநூல் பக்கம் இல்லை அது போலியான கணக்கு என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும், மிக விரைவில் அரசியலுக்கு வந்து தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என தெரிவித்த ஸ்ரீ ரெட்டி வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srireddy says about dmk udhayanethi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->