இலங்கை வன்முறை : தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பொதுமக்கள் தெருவில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில், இலங்கை அரசியல் தலைவர்கள் 35 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. 

மேலும், போராட்டத்தால் புரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்‌ஷேவின் வீடும் எரிக்கப்பட்டது.  மக்களின் இந்த கடுமையான போராட்டம் காரணமாக ஏரளாமான வாகனங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. 

இந்த நிலையில், இலங்கை வன்முறை காரணமாக, தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம், தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உளவுத்துறை எச்சரிக்கைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, இலங்கை நாட்டின் ஹம்பந்தோட்டா சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதால், தமிழகம் வரும் அகதிகளோடு சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri lankan issue central wart to tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->