சிறப்புச்சேய்தி! 762 மாணவர்களுக்கு கல்வி கட்டணம்! ரூ. 10,000 நாளை வழங்க இருக்கிறார் முதலமைச்சர்...! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, கொளத்தூர், ரெட் ஹில்ஸ் சாலை, எஸ். ஜெ. அவென்யூ, அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை அதாவது (21.07.2025) திங்கட்கிழமை காலை 09.45 மணி அளவில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க இருக்கிறார்.

இந்த விழாவில் பல நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.இதில் குறிப்பாக, அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 762 மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.10,000/- வழங்க இருக்கிறார்.

மேலும், கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் மற்றும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குப் பல்கலைக்கழக விதிமுறைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கும், கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Special offer Education fees 762 students Rs 10000 given tomorrow by Chief Minister


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->