திமுகவின் கடைசி ஆசைக்கும் வைக்கப்பட்ட ஆப்பு! டெல்லியில் நடக்கும் களேபரம்!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழக அளவில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்ட 19 தொகுதிகளிலும், திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளும், ஆகமொத்தம் திமுக பெயரில் 23 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 

இந்த தேர்தல் தொடங்கும் முன் திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து இருந்தாலும், மூன்றாவது அணி என்ற ஒன்று அமைக்கப்பட்டு இருந்தால், அதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரதமர் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது என விவாதிக்கப்பட்டது. ஆனால் மூன்றாவது அணியில் பிரதமர் கனவில் இருந்த அனைவரின் கனவையும் பாஜக தவிடுபொடியாக்கி விட்டது. அதனால் ஸ்டாலினின் பிரதமர் கனவு பறிபோனது. 

அதே போல தமிழகத்தின் முதல்வராக ஆகிவிட வேண்டும் என இடைத் தேர்தலை சந்தித்த திமுகவிற்கு குறிப்பிடத்தகுந்த வெற்றி கிடைத்தும், தேவையான அளவு வெற்றி கிடைக்காத அளவிற்கு அதிமுகவிற்கு கூட்டணிக் கட்சியான பாமக ஆதரவு அமைந்துவிட்டது. பாமக பலம் வாய்ந்த அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர் தொகுதியில் அதிமுக வென்றது குறிப்பிடத்தக்கது. 

பிரதமர் கனவும் பறிபோனது, முதல்வர் கனவும் பறிபோனது. இதனிடையே மூன்றாவது அணி அங்கே ஆட்சியை பிடித்து, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் இங்கே ஸ்டாலின் முதல்வர் எனவும், அங்கே கனிமொழி துணைப்பிரதமர் எனவும் கனவு கண்டது மட்டுமின்றி, அதை திமுக ஆதரவு ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்தியாக வெளியிடவும் செய்தார்கள். திமுக ஆதரவு ஊடகங்கள் இதனையே முன்னிலைப்படுத்திச் செய்திகளை வெளியிட்டிருந்தன. 

இந்நிலையில் அங்கே கூட்டணி ஆட்சிக்கோ, துணை பிரதமருக்கோ வேலையில்லாமல் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று விட்டது. அதனால் பிரதமர், துணை பிரதமர், முதல்வர் என அனைத்துமே கனவாகவே போய்விட்டது. தற்போது விசிக, மதிமுக, ஐஜேகே, கொமதேக தயவால் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுகவிற்கு மக்களவை துணை சபாநாயகர் பதவி கிடைக்கும் என திமுக எதிர்பார்ப்பதாக திமுக ஆதரவு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. ஆனால் பாஜகவிற்கு அப்படி ஒரு திட்டமே இல்லை என்றே செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. 

திமுக அந்த பதவியை எதனடிப்படையில் எதிர்பார்க்கிறார்கள் என்றால், கடந்த முறை மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுகவிற்கு அந்த வாய்ப்பை பாஜக வழங்கியிருந்தது என்பதால் தான். ஆனால் அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியுடன், விருப்பமான தலைவர் மட்டுமல்லாமல், நல்ல ஒரு நட்புடன் இருக்கும் தலைவர்களாகவும் இருந்தார்கள். அதனால் அதிமுகவிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் திமுக பாஜக உறவு என்பதோ சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

இருந்தும் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுகவிற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என திமுக வட்டராம் எதிர்பார்க்கிறது. ஏனெனில் 38 தொகுதிகளை வென்றும் எவ்வித அதிகாரமும் இல்லாமல் தான் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் திமுக உள்ளது. உறுப்பினர்களாக மட்டும் இல்லாமல் மக்களவைத் துணை சபாநாயகர் பதவி கனிமொழிக்கு கிடைத்தால் கௌரவமாக இருக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது திமுக. 

இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் பதவியை எங்களுக்கே வழங்க வேண்டும் என பாஜகவின் நிரந்தர கூட்டணி கட்சியான சிவசேனா கோரிக்கை வைத்துள்ளது. அதோடு இல்லாமல் அமைச்சரவையிலும் வலுவான பதவிகள் வழங்கியே ஆக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மஹாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் சிவசேனாவிற்கே வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது.  

ஆக, பிரதமர், துணை பிரதமர், முதலமைச்சர் என ஒவ்வொரு கனவும் சிதைந்து போக இறுதியாக துணை சபாநாயகர் என்ற கனவில் திமுகவினர் தற்பொழுது இருந்து வருகிறார்கள்.  ஆனால் இதுவும் கனவாகவே தான் போகும் என்ற நிலையே தற்போது வரை நீடிக்கிறது. மிகப்பெரிய வெற்றியை பெற்றும் திமுகவினர் அதனை கொண்டாட முடியாமல் தவிக்கின்றனர். 

தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் ஒரு பழமொழியை கூறிக்கொண்டே இருந்தார். அது அவரது கட்சிக்கே பொருந்தும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivasena ask bjp to deputy speaker in lok sabha


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal