திமுக பெண் வேட்பாளர் கணவரின் கன்னத்தில் பளார்., பளார்., விட்ட உதயசூரியன்.! வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


திமுக வேட்பாளரின் கணவரை, திமுக நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடிய திமுக வேட்பாளரின் கணவரை, அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறையும் காட்சிகள் அடங்கிய காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி அருகே வேட்புமனு பரிசீலனை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது திமுக பெண் வேட்பாளர் ஒருவரின் கணவரின் கன்னத்தில், திருத்தங்கள் நகர திமுக பொறுப்பாளர் உதயசூரியன் என்பவர் திடீரென கன்னத்தில் அறைந்தார். இதனை பார்த்துக் கொண்டிருந்த போலீசார் உட்பட திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இருப்பினும், அடி வாங்கிய திமுக வேட்பாளரின் கணவர், அடித்தவர் பின்னாலேயே செல்கிறார். இதுகுறித்த அந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivakasi dmk candidate husband attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->