மகாராஷ்டிரா அரசியல்..! சரத்தை இழுத்துவிட்டு, சர்ச்சையை கிளப்பிய சஞ்சய் ராவத்..! - Seithipunal
Seithipunal


ஐக்கிய முற்போக்கு கூட்டணிகள் தலைவராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பொறுப்பு வகித்து வரும் நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கட்சி தலைவராக சரத்பவார் போன்ற காங்கிரஸ் கட்சி அல்லாதோர் நியமனம் செய்யப்பட வேண்டும் சிவசேனா தெரிவித்து இருக்கிறது. 

இந்த விஷயம் தொடர்பாக அக்கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கையில் தெரிவித்தார். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், " ஐக்கிய முற்போக்கு கூட்டணியானது முடங்கியுள்ளது. அந்த கூட்டணியின் தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நியமனம் செய்யப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி அல்லாதோர் தலைமையை பொறுப்பேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் " என்று தெரிவித்தார்.

இந்த விஷயத்திற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சிவசேனா எம்.பியின் கருத்துக்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், " ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சிவசேனா அங்கம் வகிக்கவில்லை. மகாராஷ்டிரா அளவில் மட்டுமே எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இதுபோன்று கருத்துக்கள் கூறுவதை சஞ்சய் ராவத் தவிர்க்க வேண்டும். சிவசேனா தலைமையில் நடைபெறும் கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இதனை மறந்துவிட கூடாது. இது போன்ற கருத்துக்களால் குழப்பம் மட்டுமே ஏற்படும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: இந்தியா உட்பட தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். தனித்திருங்கள்.. விலகியிருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shiv Sena MP Sanjay Rawat Talks about Alliance Head Sarat Pawar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->