நீண்ட இழுபறிக்கு பின்னர் மஹாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்ட்ராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜா - சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன, இந்த கூட்டணி மொத்தமாக 161 தொகுதிகளில் வெற்றிபெற்றது, அதில் பாஜக 105 தொகுதிகளிலும் ,சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதில் ஏழு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சிவசேனாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். சரத் பவார் தலைமைலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்றதுள்ளது.

50-50 பார்முலாப்படி முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்குப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் திட்டத்தால் மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இதையடுத்து, 50-50 பார்முலாப்படி முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்குப் பகிர்ந்து கொள்ள பாஜக மறுப்பு தெரிவித்துவிட்டதால், காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமைலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவெடுத்த சிவசேனா, இந்த இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் போது மத்தியில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டால், ஆதரவளிப்பதாக சரத் பவார் திட்டவட்டமாக தெரிவித்தார் கூறிவிட்டார். 

இதையயடுத்து, கனரகத் தொழில் மற்றும் பொதுநிறுவனங்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அரவிந்த் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று காலை அறிவித்திருந்தார். தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் மோடிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.

பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளிய வந்த பிறகு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்ய சிவசேனா தயாராகி வருகிறது. இதனிடையே உத்தவ் தாக்கரே சோனியா காந்தியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் சிவசேனாவுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இதனை தொடர்ந்து, மஹாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யரியை சந்திக்கும் சிவசேனா தலைவர்கள் மஹாராஷ்டிராவில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

இதற்கிடையே, முதலமைச்சர் பதவிக்கு உத்தவ் தாக்கரேவும், துணை முதலமைச்சர் பதவிக்கு அஜித் பவாரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என செய்தி வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shiv sena leaders meet with governer


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->