தமிழ்நாட்டில் தான் படிச்சேன்.. ஆனாலும்.... தமிழ் தெரியாது... தருமபுரி திமுக எம்.பி. டகால்டி..!! - Seithipunal
Seithipunal


சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தருமபுரி எம்பி செந்தில்குமார் 'துவக்க கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி வரை ஏற்காடு மான்ஃபோர்ட் பள்ளியில் தான் நான் படித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் தான் படித்தேன். இதனை தொடர்ந்து, பிரெஞ்ச் மொழியை தேர்வு செய்து படித்தேன்.

எனவே, சரியாக தமிழை எனக்கு உச்சரிக்க முடியுமே தவிர எழுத முடியாது. அதே நேரத்தில் எனக்கு இந்தியை பேசவோ, எழுதவோ,படிக்கவே சுத்தமாக தெரியாது என தெரிவித்துள்ளார். 

முழுக்க முழுக்க ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற பள்ளிகளில் தான் படித்ததால் தமிழை பிழையின்றி எழுத படிக்க தெரியாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனது கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். அதில், பல முறை பிழை இருப்பதாக நெட்டிசன்களிடம் பல்பு வாங்கி வருவார். இந்நிலையில், தனது தவறு குறித்து தற்போது தானே ஒப்புக்கொண்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthilkumar Mp speech about his weakness


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal