உள்ளாட்சி தேர்தலில் சறுக்கும் திமுக.! கொத்தாக அள்ளிய அதிமுக.! செந்தில் பாலாஜி ஷாக்.!  - Seithipunal
Seithipunal


அதிமுகவில் கரூர் மாவட்ட செயலாளராகவும், இருந்து அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தவர் கரூர் செந்தில் பாலாஜி. அதன்பின்னர் அதிமுகவிலிருந்து தினகரன் தனி அணியாக பிரிந்த பொழுது அவருடன் சென்ற செந்தில் பாலாஜி MLA பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் அமமுகவில் சிறிது காலம் நீடித்த அவர் எதிர்பாராத விதமாக திமுகவில் இணைந்தார்.

அவருக்கு திமுகவிலும் கரூர் மாவட்ட செயலாளராக பதவி கிடைத்தது. அத்தோடு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அரவக்குறிச்சி எம்எல்ஏவாக பதவி ஏற்றார். இந்நிலையில் அடிக்கடி இப்படி கட்சி மாறும் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு இதன் காரணமாக அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 'ரெட்டலைக்கு ஓட்டு போடுங்கனு கேட்ட அதே வாயால, சூரியனுக்கு போடுங்கனு கேட்க முடியல' என்று புலம்பி வருகின்றனர். 

Instagram இல் இந்த இடுகையை காட்டு

14.11.19 இன்று: #கரூர்_திமுக_செந்தில்பாலாஜியின் #ஆதரவாளர்கள்_அஇஅதிமுகவில்_இனணப்பு கரூர் மாவட்டக் கழகச் ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் அண்ணன் #எம்_ஆர்_விஜயபாஸ்கர் முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர் இவண்: #கரூர்_மாவட்ட_அஇஅதிமுக_கழக #தகவல்_தொழில்நுட்ப_பிரிவு

அன்று AIADMK IT WING KARUR ✌️🌱 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aiadmk_it_wing_karur)

தற்போது உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் கரூர் மாவட்ட கழக செயலாளரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம் ஆர் பாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் கொத்தாக இணைந்துள்ளனர். இச்சம்பவம் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

திமுகவின் மாவட்ட செயலாளராக இருக்கும் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாளர்கள் குறைய தொடங்கியது, அந்த பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்வாங்கும் சூழ்நிலைக்கான அறிகுறி என அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுகின்றது. தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக செந்தில் பாலாஜி என்ன மாதிரியான திட்டத்தை வகுப்பார் என்பது அனைவருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthil balagi shock about local body election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->