#Breaking || தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டு வகுப்புகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றது. காலாண்டு தேர்வுகளை ஆன்லைனில் சில பள்ளிகள் நடத்தி முடித்து இருக்கின்றது. நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. 

இதன் காரணமாக வரும் ஒன்பதாம் தேதி பள்ளி நிர்வாகம் பெற்றோருடைய கருத்தை கேட்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகள் திறப்பதில் மீண்டும் சிக்கல் வந்து இருப்பதால், பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுடைய நிலை குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. 

இந்நிலையில், பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, "இந்த வருடம் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. 

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்படும். பள்ளி பொதுத்தோ்வு குறித்து டிசம்பா் இறுதிக்குள் முடிவு செய்யப்படும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sengottaiyan press meet nov 18


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->