இனி பள்ளி மாணவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளுக்கு செல்வார்கள்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கோபிச்செட்டி பாளையத்தில்தாலிக்கு தங்கம் வழங்கும் விழா  நடைபெற்றது இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு 280 பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளையும், 298 பேருக்கு 2 கோடியே 10 லட்சத்து 5 ஆயிரத்து ரூபாய் மதிப்புள்ள தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பேசியதாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிசிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள் என்ற அவர். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் 45 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார், மீதமுள்ள மாணவர்களுக்கு விரைவில் மடிகணினி வழங்கப்படும் என தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்காக 1,000 ஆங்கில வார்த்தைகள் கொண்ட மென்பொருள் பள்ளி கல்வி துறை சார்பில்  உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் இந்த மென்பொருளை முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட உள்ளார் என கூறினார். 

மேலும், பள்ளியில் பயின்று வரும்மாணவ, மாணவிகளை நேரடியாக தொழிற்சாலைகளுக்குகே  அழைத்து சென்று பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் தமிழக அரசு பள்ளிகளை உருவாக்குவோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sengottaiyan new announcement for student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->