டிடிவி தினகரனை சந்தித்ததாக வெளியான தகவலை மறுத்த செங்கோட்டையன்!ஆனால் அடுத்து சொன்ன முக்கிய தகவல்!
Sengottaiyan denied the news that he met TTV Dhinakaran But the next important information he said
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி குழப்பங்கள் வெடித்துள்ளன. கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று மதியம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின.
சென்னை அடையாறு இல்லத்தில் தினகரனைச் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் பரவிய நிலையில், அதனை செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். “டிடிவி தினகரனை சந்திக்கவில்லை. என் மனைவி அங்கு இருந்ததால் அவரை பார்க்க மட்டுமே சென்றேன்” என்று அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், “எனது நோக்கம் ஒன்றே ஒன்று – அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். கட்சி ஒருங்கிணைந்தால் தொண்டருக்கும் மகிழ்ச்சி, மக்களுக்கும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.
ஓபிஎஸ் தரப்பிலிருந்தோ, வேறு எந்த அணியிலிருந்தோ சந்திப்புகள் எதுவும் நடக்கவில்லை என்றும், ஒருங்கிணைப்பு பற்றிய தனது கருத்தை மதித்து சிலர் நன்றி கூறியதையே தவிர, வேறு பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்றும் செங்கோட்டையன் தெளிவுபடுத்தியுள்ளார்.
மறுபுறம், டிடிவி தினகரன் சமீபத்தில் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, மீண்டும் கூட்டணிக்கு வருமாறு மாஜி பாஜகத் தலைவர் அண்ணாமலை கோரியிருந்தார். ஆனால், அதனை தினகரன் நிராகரித்து, “எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் ஆகக்கூடாது என்ற எங்கள் நிலைப்பாடு மாறாது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் தான் செங்கோட்டையன்–டிடிவி தினகரன் சந்திப்பு குறித்த தகவல் பரவிய நிலையில், அதை செங்கோட்டையன் முற்றிலும் மறுத்து விளக்கம் அளித்திருக்கிறார்.
English Summary
Sengottaiyan denied the news that he met TTV Dhinakaran But the next important information he said