தமிழகத்தில் ஏற்ப்படவுள்ள திருப்புமுனை.?! இடைத்தேர்தல் கணிப்பு கைகொடுக்குமா.?!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திருப்புமுனை ஏற்படப் போவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஈவேரா கடந்த ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பினால் உயிரிழந்தார். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியானது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான, வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வரும் ஜனவரி 31-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்ர நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய போது, "தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் கூட திமுக சொன்ன திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லை. ஆகவே, மக்களின் மனம் மாறிவிட்டது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறப்போவது உறுதி. 

இந்த வெற்றியானது தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும். எடப்பாடி பழனிசாமி விரைவில் வேட்பாளரை அறிவிப்பார். இரட்டை இலை சின்னம் எங்களை பொறுத்தவரை எங்களுக்கு தான் கிடைக்கும்." என்று தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் இந்த கணிப்புகள் கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sengottaiyan About Erode election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->