ரஜினிக்கு மட்டும் விருது... இவருக்கும் கொடுக்கலாமே.?! - சீமான் ஆவேசம்.! - Seithipunal
Seithipunal


இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் எண்டா்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா அமைப்பு இணைந்து, வருடம்தோறும் கோவா திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. 

சர்வதேச தரத்திலான இந்தத் திரைப்பட விழாவில், உலகம் முழுவதிலும் இருந்து திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். வரும் நவம்பர் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறயுள்ளது.  வழக்கமாக 10 நாள்கள் நடைபெறும் கோவா திரைப்பட விழாவில் சுமார் 200 படங்கள் திரையிடப்படும். 50-ஆவது ஆண்டு விழா என்பதால், சுமார் 300 படங்கள் திரையிடப்படயுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019 என்கிற சிறப்பு விருது வழங்கப்படுகிறது என்று டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ரஜினிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், சீமான் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார். இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "ரஜினிக்கு விருது கொடுத்ததற்கு பாராட்டுகள். இருப்பினும், அவரை விட கமலஹாசன், பாரதிராஜா, இளையராஜா போன்றோர் அதிகம் சாதித்திருக்கின்றனர். ரஜினி பாஜகவிற்கு வேண்டப்பட்டவர் அதனால்தான் மத்திய அரசு அவருக்கு விருதை அறிவித்துள்ளது." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

semman press meet about rajini award


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->