விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதி குறித்து முக்கிய முடிவை அறிவித்த சீமான்! - Seithipunal
Seithipunal


நேற்று தமிழகத்தில் விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டது. 

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, "தமிழகத்தில் தற்போது காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும். தேர்தல் வாக்குப்பதிவு அக்டொபர் 21 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24 ஆம் தேதியும் நடைபெறும். " என கூறியுள்ளார். 

இடைத்தேர்தல் தேர்தல் அட்டவணை:

வேட்புமனு தாக்கல் ஆரம்பம் : செப்டம்பர்  23

வேட்புமனு தாக்கல் முடிவு : செப்டம்பர்  30

வேட்புமனு பரிசீலனை : அக்டோபர் 01

வேட்புமனு வாபஸ் பெற : அக்டோபர் 03

தேர்தல் வாக்குப்பதிவு : அக்டோபர் 21

தேர்தல் முடிவுகள் : அக்டோபர் 24 

இந்நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இந்த தொகுதிகளில் போட்டியிட  ஒவ்வொரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில் இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று தாம்பரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு வேட்பாளர்களை சீமான் அறிவிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

semman announced about vikarandi election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->