ஆட்சி கலைப்பது, அபார்ஷன் செய்ற மாதிரியா.?! அமைச்சரின் சர்ச்சை கருத்து.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கூட்டுறவுத் துறை அமைச்சரான செல்லூர் ராஜு தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசை யாரும் கலைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கின்றார். 

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்து வருகின்றார். 

இந்நிலையில் இது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும்." என்று தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் ராஜாவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செல்லூர் ராஜு, "யார் நினைத்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது. அது என்ன கருக்கலைப்பு போன்று எளிதாக இருக்கும் என்று நினைத்து விட்டார்களா.?" என்று காட்டமாக தெரிவித்து இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sellur raju says about H raja tweet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->