அடுத்தவருடம் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல்வர் எடப்பாடியின் பெயர் தான்! சரக்கு சங்க தலைவர் அதிரடி பேட்டி! - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக டாஸ்மார்க் கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டன. தலைநகரான சென்னையில் அதிக தொற்று ஏற்பட்டதால் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன், தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், டாஸ்மார்க் கடை மூடல் காரணமாக மது பிரியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது என்றும், குழந்தைகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சூட்ட உள்ளதாகவும் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "கோயில்களை விட அரசு டாஸ்மாக் திறக்கிறது என்றால் குடிமகன்கள் மேல் தமிழக அரசுக்கு பாசம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்?., எனவே, இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். டாஸ்மாக் கடைகளைத் திறந்து நெஞ்சில் பாலை வார்த்துள்ளார்.

குடித்துக்கொண்டே இருந்ததால் பல மதுப்பிரியர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இந்த உறங்கினால் பலருக்கு குழந்தைப் பாக்கியம் ஏற்பட்டு இருக்கிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பிறக்கும் குழந்தைகளுக்கு நாங்கள் அய்யா எடப்பாடி பழனிச்சாமி பெயரைத்தான் வைப்போம். 

அதற்கு காரணம், முதல்வர் எங்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். டாஸ்மாக் மூடியதால் அவர்மீது இருந்த வருத்தம் எல்லாம் மதுப்பிரியர்கள் வாரிசு உருவாக்கியதில் எங்களுக்கு போய்விட்டது" என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு செல்லப்பாண்டியன் பேட்டியளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sellpandiyan say next year born baby names are tn cm name


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->