நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை.! சீமான் பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், "அரசியல் என்பது மக்களின் மீது அதிகாரத்தை செலுத்தும் விவகாரம் அல்ல. மக்களுக்காக ஆற்றும் தொன்றே அரசியல். 

தேர்தல் களப்பணிகள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சிறப்பாக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆரை பொறுத்த வரையில், இலங்கையில் தமிழருக்கான போரில் உறுதுணையாக இருந்தார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், எம்.ஜி.ஆர் - கருணாநிதி தமிழகத்திற்கு செய்தது என்ன?. அன்றைய காலத்திலேயே தமிழகத்திற்கான உரிமையை விட்டுக்கொடுத்து வந்தார்கள்.

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிக்கும் கமலுக்கும் கொடுக்கின்ற அடியில், தமிழ்நாட்டில் இனி எந்த ஒரு நடிகனும் சினிமாவில் நடித்தால் சிஎம் ஆகலாம் என்ற கனவுக்கு வரக்கூடாது" என்று சீமான் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் நீங்கள் சொன்ன கூற்று நடிகர் ரஜினி கமலுக்கு மட்டும் தானா அல்லது விஜய்க்கும் சேர்த்து தானா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், "எல்லோருக்கும் இது பொருந்தும்" என்று காட்டமாக பதில் அளித்தார்.

இதற்கு நடிகர் விஜயின் ரசிகர்கள், சீமானுக்கு பல்வேறு வகைகளில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், "விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? நான் நடிகர் விஜயை அரசியலுக்கு வரவேண்டாம் என்று கூறவேயில்லை. அவர் அரசியலுக்கு வரும்முன் தம்பி சூர்யா போல் குறைந்த பட்சம் மக்களுக்காக குரல் கொடுத்துவிட்டு அரசியல் களத்துக்கு வரட்டும்." என்று சீமான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman talk about vijay dec25


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->