எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடுவது ஏன்..? சீமான் கேள்வி..!
Seeman asks why the DMK government is playing a drama on the SIR issue
எஸ்ஐஆர் விவகாரத்தில், பூத் லெவல் அதிகாரிகளை நியமித்துவிட்டு திமுக அரசு நாடகம் ஆடுவதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
எஸ்ஐஆர் வேண்டாம் என்றால் பூத் லெவல் அதிகாரிகளை நியமித்தது யார்..? சார் வேண்டாம் என்று கூறுகிறீர்களே..? அப்போது எதற்காக நியமிக்கிறீர்கள்..? பூத் லெவல் அதிகாரிகளை நியமிப்பது தேர்தல் ஆணையமா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், எஸ்ஐஆர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் என்று கூறி எதற்காக தமிழக அரசு உதவி எண்களை அறிவித்தது.? என்றும், எஸ்ஐஆர் வேண்டாம் என்று கூறி எதிர்த்து விட்டு எதற்காக திமுக இந்த நாடகம் போடுகிறது..? என்றும் விமர்சித்துள்ளார். அவசரமாக சட்டசபையை கூட்டி, இது சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) அல்ல... சீரழிவு என்று கூற வேண்டும்.
இறந்தவர்களை வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். ஒருத்தன் 02 வாக்குரிமை வைத்துள்ளான், செத்தவர்கள் எல்லாம் ஓட்டு போட்டுள்ளனர் என்பதை நேற்று தான் கண்டுப் பிடித்தீர்களா..? இறப்பு சான்றிதழ்களை கொண்டு அவர்களை கண்டறிந்து வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கலாமே என்று பேசியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், அன்றைக்கு வாக்காளர் ஆட்சியாளரை தீர்மானித்தனர். ஆனால், இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள், யார் தனக்கு ஓட்டு போட வேண்டும் என்று வாக்காளர்களை தீர்மானிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த நாடு ஏற்றுக் கொண்டுள்ள பொருளாதார கொள்கை ஆபத்தானது எனவும், நாட்டில் ராணுவத்தில் கூட அந்நிய முதலீடு 100 சதவீதம் வந்துவிட்டதாகவும், கல்வி, மின் உற்பத்தி மருத்துவம், போக்குவரத்து என அனைத்தும் தனியார் மயம் ஆகிவிட்டதாகவும், இப்படி எல்லாமே தனியார்மயம் என்றால் அரசின் வேலை என்ன..? பொதுத்துறை என்று எதுவுமே இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Seeman asks why the DMK government is playing a drama on the SIR issue