மோடி எதிர்ப்பு படத்தை பார்த்தால் கைது.. திமுகவின் ஜால்ரா சம்பவத்துக்கு சீமான் கொந்தளிப்பு.!  - Seithipunal
Seithipunal


குஜராத் கலவரத்தின் ஆவணப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த வீடீயோவை பார்த்த கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் உட்பட பலரும் கைது செய்யப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்த கலவரத்திற்கு காரணமாக பலரின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில், பிரபல செய்தி நிறுவனமான பிபிசி இந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்திற்கு இந்திய பிரதமர் மோடி தான் முக்கிய காரணம் என்று ஆவணப்படம் ஒன்றை தயாரித்து இருந்தது.

இந்த ஆவண படம் கடந்த வாரம் வெளியிட்ட நிலையில், இதற்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த வீடியோ இந்தியாவில் மட்டும் யாராலும் பார்க்க முடியாதபடி தடை செய்யப்பட்டது. ஆனால் உலகின் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த வீடியோவை பார்க்க முடியும். 

இத்தகைய நிலையில் இந்த குஜராத் கலவர ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் பிபிசி வெளியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலரான பிரியதர்ஷினி உள்ளிட்ட பலரும் சென்னையில் பொது இடத்தில் வீடியோவை திரையிட திட்டமிட்டு இருந்தார்கள். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். எனவே மொபைல் போனில் அந்த வீடியோவை பார்த்தார்கள். எனவே, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "மோடியின் ஆவணப்படத்தை பார்ப்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கருத்துரிமைகளுக்கும் தனிநபர் சுதந்திரத்திற்கும் எதிராக திமுக அரசு செயல்படும் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது. பாஜக அரசை எதிர்ப்பதாக கூறிக் கொண்டே அவர்களுக்கு ஆதரவு தரும் செயல்களை திமுக அரசு செய்து வருகின்றது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman Angry about Dmks stand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->