சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ மரணம்.! மரணத்திற்கான காரணமும் வெளியானது.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர். மேலும், காவல் துறை அதிகாரிகள் விலையுயர்ந்த அலைபேசியை இலவசமாக கேட்டதாகவும் தெரியவருகிறது. காவல் நிலையத்தில் மகன் பென்னிக்ஸ் முன் நிலையில் அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பென்னிக்ஸ்க்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, காவல் துறையினர் பென்னிக்ஸை கட்டி வைத்து அடித்ததாகவும், எல்லாவற்றையும் தாண்டி அவரது ஆசன வாய் உள்ளே லத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சித்திரவதைகளுக்கு பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். 

இதனிடையே தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. காவல்துறை அதிகாரிகளின் கொடூரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பலகட்ட பேச்சுவார்த்தை சமாதானத்திற்கு பின்னர் உடலை பெறவும், பிரேத பரிசோதனை மேற்கொள்ளவும் உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். 

இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பால்துரை உயிரிழந்தார் என தகவல் வெளியாகியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sathankulam case si palthurai passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->