தினகரனுக்கு பேரதிர்ச்சி கொடுத்த அதிமுக.. இணைந்த உடனே முக்கிய பதவி வழங்கிய அதிமுக தலைமை.!! - Seithipunal
Seithipunal


நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து தங்க தமிழ்ச்செல்வன் தன்னை திமுகவில் இணைந்து கொண்டார். இது அதிமுகவினருக்கும், தினகரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தினகரனுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வட சென்னை வடக்கு மாவட்ட அமமுகவினர் பலர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

மேலும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவினர் 80 பேர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், நேற்று அதிமுகவில் இணைத்த வழக்கறிஞர் சசிரேகா சசிரேகாவுக்கு அதிமுகவின் செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasireka appointed admk spokesperson


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->