அமமுக நிர்வாகிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அதிமுகவில் கிடைக்கப்போகும் பதவி.? - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் சென்னை அசோக் நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது இசக்கி சுப்பையா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைந்து கொண்டதால் கட்சி அலுவலகத்தை காலி செய்யுமாறு தினகரனுக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். 

இதையடுத்து ராயப்பேட்டையில் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் மாற்றியுள்ளார் டிடிவி தினகரன். எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில் பிரீஸ்ட் பல்கலைக் கழகத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் புதிய அலுவலகம் திறப்பு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 

கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக வந்து கலந்துகொண்டனர். சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருகிறார். அவர் வந்ததும் அதிமுக அவர் வசம் வந்துவிடும் உண்மையான விசுவாசிகள் நிச்சயம் பதவி தேடிவரும் என தினகரன் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டியதாக கூறப்படுகிறது. 

மேலும் அமமுகவுக்கு தொண்டர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 10 பேரையாவது சேர்க்க வேண்டு.அப்படி கட்சியில் இணைபவர்களுக்கு சசிகலாவை தன்னுடைய கையில் உறுப்பினர் அட்டையை வழங்குவார் என அமமுகவினரை டிடிவி தினகரன் உற்சாகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதிமுக அவர் வசம் போடும் என தினகரன் கூறியிருப்பது விரைவில் அமமுகவும், அதிமுகவும் ஒருங்கிணைந்த அதிமுகவாக செயல்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகையால் சசிகலா வெளிவந்ததும் அமமுக நிர்வாகிகளுக்கு அதிமுகவில் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala release may be admk and ammk join


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->