கதவை உடைச்சிட்டு போக தயாரானோம், அப்ப தான் அவரை நேர் ல பார்த்தேன் - ரஜினி குறித்து சசிகலா பேச்சு.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்தை எம்.ஜி.ஆரின் மரணத்தின் போதுதான் முதல் முறையாக நேரில் சந்தித்தேன் என சசிகலா தெரிவித்தார்.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசுவது தொடர்பான ஆடியோ வெளியான நிலையில், சசிகலாவிடம் பேசுவதாக தெரிந்த அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். 

இந்நிலையில், தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சிக்கு சசிகலா நீண்ட மாதத்திற்கு பின்னர் பிரத்தியேக பேட்டியளித்துள்ளார். இது தொடர்பான பேட்டியில் அவர் பேசுகையில், " நான் மருத்துவராக வேண்டும் என்பதே எனது கனவு. எனக்கு சிறுவயதில் திருமணம் நடந்த காரணத்தால் அந்த விருப்பம் கானல் நீராகிப்போனது. 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இறந்த செய்தியை நான் தான் தொலைபேசி வாயிலாக ஜெயலலிதாவிடம் தெரிவித்தேன். இதனைக்கேட்ட அவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினார், மவுனமாக இருந்தார். பின்னர், எம்.ஜி.ஆரின் உடல் இராமவாரம் தோட்டத்தில் வைக்கப்பட்டு இருந்தது. நானும், தினகரனும், ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரின் உடலை பார்க்க நேரில் இராமவாரம் தோட்டத்திற்கு சென்றோம். 

அதன்போது, எங்களது காரினை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலே வெளியே நிறுத்தப்பட்ட நிலையில், இறுதியில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல தயாராகினோம். இதன்போது, திடீரென கதவு திறக்கப்பட்டது. அங்கு முன்னாள் அமைச்சர் ராஜாராம், ரஜினிகாந்த் ஆகியோர் இருந்தனர். எங்களை உள்ளே விட ரஜினிகாந்த் கூறினார். அப்போது தான் ரஜினியை நேரில் முதன்முறையாக பார்த்தேன் " என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala Private TV Channel Pressmeet about his Life Speech 18 July 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->