அதிமுகவின் 20 எம்எல்ஏக்கள்.! சசிகலா போடும் பக்கா பிளான்.!  - Seithipunal
Seithipunal


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து விடுதலையாகி தமிழகம் வந்துள்ள சசிகலா, 'தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே சசிகலா தமிழகம் வந்த உடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் அனுமதி இன்றி நுழைவார் என்ற தகவலால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சசிகலாவிற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஆதரவாக இருப்பதாகவும், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளும் சசிகலாவுக்கு ஆதரவான மனப்பான்மையே இருப்பதாகவும் இதன் காரணமாக சசிகலா அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுத்து, அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே சமயத்தில், அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அதிமுகவின் தற்போதைய தலைமை சமாதானம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலா அதிமுகவுடன் ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடையே உள்ள வரவேற்பு உள்ளது என்பதால், அவரை முன்னிறுத்தியே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் பட்சத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி என்று பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala new plan feb


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->